இயேசு நம் முன் சென்று
yesu nam mun sendru
இயேசு நம் முன் சென்று நடக்கும் பாதை காட்டிடுவார் தடுமாற வைக்கும் கடும் இருளில் பேரொளியாய் திகழ்ந்திடுவார் ஆ ஆ
வாழ்க்கைப் பயணத்தில் துணையிருப்பார் தடைச் சுவர் தனைதாண்டி தகர்தெரிவார் கடக்க முடியாத தண்ணீரை மாற்றி தரை போல் நடக்க உதவி செய்வார்
மாமலை உருக்கும் அவர் சமூகம் அலைகடல் அமைதியாய் அமர்ந்தடங்கும் பார்வை பட்டால் பசி பறக்கும் அவர் சொல்ல வியாதியும் நீங்கும்