இயேசு நல்ல மேய்ப்பர்
yesu nalla meyppar
பல்லவி
இயேசு நல்ல மேய்ப்பர் என்றும் என்னை காப்பார் எனக்கு ஏதும் குறைவு இல்லை உலகிலே எனக்கு ஒன்றும் குறைவு இல்லை உலகிலே
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் நல்ல நீரோடை அண்டையிலே நடத்திடுவார் பசும்புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் நல்ல நீரோடை அண்டையிலே நடத்திடுவார் அவர் நாமத்தின் நிமித்தம் என்றென்றும் என்னை நீதியின் பாதையில் நடத்திடுவார்
மரணயிருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்பு ஐயோ என்று பயப்படமாட்டேன் கோலும் உண்டு தடியும் உண்டு என்னை தேற்றவே துதிப்பாடல் ஒன்று பாடிடுவேன் உம்மை போற்றியே
பகைவர்க்கெதிரே ஒரு பந்தி ஆனந்த தைலத்தால் அபிஷேகம் பாத்திரம் நிரம்பி வழிய ஜீவன் உள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் எனைத் தொடரும்
பல்லவி
இயேசு நல்ல மேய்ப்பர் என்றும் என்னை காப்பார் எனக்கு ஏதும் குறைவு இல்லை உலகிலே எனக்கு ஒன்றும் குறைவு இல்லை உலகிலே