இயேசு நாதா வாரும்
yesu naadhaa vaarum
இயேசு நாதா வாரும் தேவா ஏழை எந்தன் சங்கடங்கள் - 2 இன்பமுடன் கேளும் தேவா இன்னல் யாவும் தீரும் தேவா - 2
கல்வாரியில் தொங்கும் போது கர்த்தரே நீர் என்னைக் கண்டு - 2 கை கால்களின் காயம் காட்டி என்னை அழைத்தீரே தேவா - 2
தேவா உந்தன் காயங்களை பார்க்கச் சிலுவையருகில் - 2 வந்தேன் தேவா இந்தப்பாடு எந்தனுக்காய்ப் பட்டரே நீர் - 2
முட்கிரீடம் உமக்கு மூங்கில்தடி செங்கோவாச்சோ - 2 மோக வழி காட்ட வந்த மோக சியோன் மன்னவரே - 2
ஆவி பிரியும் வரையும் தேவா உந்தன் பக்கம் நின்று - 2 ஆறுதல் மொழிகள் சொல்ல ஆருமில்லையோ உமக்கு - 2
பன்னிரு சீஷர்களுண்டு பாவம் தீர்ந்த பேர்களுண்டு - 2 மன்னராக்க எண்ணம் கொண்ட மானிடரும் எங்கே போனார் - 2
பாழுலகின் பாவமெல்லாம் பாக்கியனே நீர் தொலைத்து - 2 தீர்ந்ததென்றோ தேவா உம்மை சினேகிதரும் கைவிட்டனர் - 2
பாவி என்னைத் தேடி வந்து பாவமெல்லாம் மன்னித்த என் - 2 இயேசு நாதா என்னை ஜீவ பலியாக ஏற்றுக் கொள்வீர் - 2