யேசு நாதா காக்கிறீர்
yesu naadhaa kaakkireer
1. யேசு நாதா காக்கிறீர் இளைப்பாறச் செய்கிறீர் மோசம் நேரிடாமலும் பாதம் இடறாமலும் என்னைத் தாங்கி நிற்கிறீர் நேச நாதா! காக்கிறீர்.
2. வாரி போன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் சூறைக்காற்று மோதினும் ஆழி கோஷ்டமாயினும் அமைதல் உண்டாக்குவீர் நேச நாதா! காக்கிறீர்.
3. சற்று தூரம் செல்லவே தேவராஜ்யம் தோன்றுமே துன்பம் நீங்கி வாழுவேன் இன்பம் பெற்று போற்றுவேன் அதுகாறும் தாங்குவீர் நேச நாதா! காக்கிறீர்.