இயேசு நாதா
yesu naadhaa
இயேசு நாதா! காக்கிறீர், இளைப்பாறச் செய்கிறீர்; மோசம் நேரிடாமலும், பாதம் இடறாமலும், என்னைத் தாங்கி நிற்கிறீர், நேச நாதா! காக்கிறீர்.
வாரிபோன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் சூறைக் காற்று மோதினும் ஆழி கோஷ்டமாயினும், அமைதல் உண்டாக்குவீர்; நேச நாதா காக்கிறீர்.
சற்றுத் தூரம் செல்லவே, மோட்ச கரை தோன்றுமே! துன்பம் நீங்கி வாழுவேன்; இன்பம் பெற்று போற்றுவேன்; அதுமட்டும் தாங்குவீர்; நேச நாதா! காக்கிறீர்.