இயேசு மனவாளனே நேசமணர்க்கீயுமே
yesu manavaalanae nesamanarkkeeyumae
இயேசு மனவாளனே! நேசமணர்க்கீயுமே. ஆசிகள் இந்நேரமிதிலே தாசர் புகலிடமே
ஹாசினியின் மீதிலே வாசம் செய்யும் காலமே நேசமுடன் வாழ்ந்திடவே,
1. பார்ம் இந்த நேரமே வல்லமையின் நாதனே மாறாத பரம்பொருளே -ஆருயிர் இவருக்கு நீரே தாரும் இந்த நேரமே பாசமுடன், அப்பனே! ஆறாக அருள் பாயவே.
2. கானானின் ஊரிலே கல்யாண வீட்டில் தானங்களைத் தந்தருளியே-விந்தை விளங்கச் செய்தி வானவனே இந்த மணம் மீதினிலே சேர்ந்துமே ஞானா! உம் அருள் தாரும்
3. இன்பப்பெருக்கில், துன்பத் துக்கத்திலும், ஒன்றாக வாழ்ந்திடவே-இன்றே ஆசீர்வதியும்; அன்பின் பெருக்கம்! என்றும் விளங்கவே அன்பே! அருள் புரிவார்.
4. சத்தியமும் ஜீவனும். உத்தமத்தின் வழியும். பக்தியுடனே தொடர்ந்து சத்தியம் நிலை நிறுத்த, சுத்த ஜீவியத்தில் நித்தமுமே நடந்து துத்தியம் பாடிடவே.
5. பலமாய்ப் படர்ந்திடும் உலகில் சுடர்களாய் வாழ்நாளில் வாழ்ந்திடவே-நாதா! அருள் புரியும் சகலமும் உமக்கு சதா காலங்களிலும் ஜெகமதில் தந்து போற்றவே