இயேசு மகாராஜனே
yesu magaaraajanae
இயேசு மகாராஜனே மீண்டும் வந்திடுவீரே உம் மக்களாய் ஒன்று கூடினோம் உம் மகிமையை தரிசிக்க
பஞ்சங்கள் கொள்ளை நோயும் வாட்டுதே பூகம்பம் யுத்தங்கள் பெருகுதே மனிதனின் அன்பு தணிந்து போகுதே உபத்திரவ காலம் தொடங்குதே
இது என்னவோ என்று சிந்தித்துப் பார் நண்பனே காலங்கள் இது முடிவுதான் என் நேசமே இவைகளெல்லாம் வேதனைக்கு ஆரம்பம் இராஜாதி ராஜன் இயேசு மீண்டும் வருகிறார்
உம் நாமம் பரிசுத்த படுவதாக உம் அரசு வருவதாக உம் சித்தம் பூமியெங்கும் நிறைவேறுவதாக என்னை மன்னித்தது போல் மற்றவர்களை நானும் மன்னிக்கணுமே எங்கள் அன்றாட உணவை அனுதினமும் தரவேண்டுமே உம் இராஜ்யம் கனமும் வல்லமை என்றென்றும் உரித்தாகட்டும்
இயேசு மகாராஜனே மீண்டும் வந்திடுவீரே உம் மக்களாய் ஒன்று கூடினோம் உம் மகிமையை தரிசிக்க மகிமையை தரிசிக்க மகிமையை தரிசிக்க
இயேசுவே வாருமே இன்றே வாருமே இயேசுவே வாருமே ஆவலாய் நிற்கிறோம் இயேசுவே இயேசுவே