இயேசு மகா ராஜன் வான
yesu magaa raajan vaana
இயேசு மகா ராஜன் வான - மேக ரதம் மேல் வரும் நாள் ஆவலுடன் நோக்கிடுவோம் - ஆயத்தமாய்க் காத்திருப்போம்
1. தூதரான வாளமுடன் தேவ எக்காளம் ( தொனிக்க தேவனாம் பிதா தாமும் ஆவலாய் காத்து நிற்கிறார் அந்த நாளினாய் - இயேசு
2. கல்லறையில் நின்று சித்தர் வல்லமையால் தாம் எழும்ப கண்ணிமை நேரம் மண்ணில் ஜீவிப்போர் விண்ணில் மாறுவோர் அண்ணல் போலவே - இயேசு
3. ஆதி மேன்மை காத்தவராயன் அன்பில் பரிசுத்தராய் அருள் நிறைவுடன் கரை திரையில்லா மகிமை சேர் மணவாட்டியாகுவோம் - இயேசு
4. தேவ புத்திரர் தோன்றுதற்காய் ஞாலமெல்லாம் தான் தவிக்க பூரணர் யாவரும் பறந்துடுவாரு புலம்பி வீழ்வாரே பூவிலாயினோர் - இயேசு
5. சீயோன் ராஜன் சுத்தர்கட்கு ஜெய கிரீடங்கள் தான் தரிப்பார் அந்த நாளில் நீ அங்கிருப்பாயோ? அன்பர் உன்னையே அழைத்து நிற்கிறார் - இயேசு