இயேசு மாத்திரம் போதும்
yesu maathiram podhum
இயேசு மாத்திரம் போதும் - பூலோகத்திலே
என்னேசரைப் போல் வேறாறையும் காணேன் - என் - இயேசு
தந்தை தாயாருமென்னைக் கைவிடுவார் எந்தையாம் இயேசு என்றும் கைவிடார் என்னை - இயேசு
தூக்கம் துன்பம் நோவு தொல்லையிலும் தக்க துணை தந்து தாங்கிடுவாரவர் - இயேசு
ஆபத்தில் என்ன யல் நின்று காக்கும் அண்ணல் இயேசு அன்றி ஆருமுண்டோ பாரில் - இயேசு
தேன் மதுரம் அவர் சத்தம் தெவிட்டாத இன்பம் தருமே என்றும் அது - இயேசு
முற்று அழகு நிறைந்தோரவர் பற்றுதலுள்ளோர்க்கு வெற்றி தருமெந்தன் - இயேசு
வாக்குத் தவறாத தூயனவர் காக்கும் கருணை நிறைந்த கர்த்தனவர் - இயேசு
மாயையும் யாதும் விரும்பமாட்டேன் நேயம் நம்மவரில் ஜீவிப்பேன் நான் - இயேசு