யேசு மா ராஜர் தாம் இதோ
yesu maa raajar thaam idho
1. யேசு மா ராஜர் தாம் இதோ வாசல் அருகே நிற்கிறார் நாம் நினையாத வேளையில் ராஜா வருவாரே.
வருவார் வருவார் ஒருவரும் அறியா நேரம் யேசு ராஜா மகா ராஜா வையகம் வருவாரே.
2. பண்டைத் தீர்க்கர் சொல்லிப்போன அடையாளங்கள் பலவும் நடைபெறுகின்றன பார் இடையறாமலே.
3. நீதி சூரியன் உதிக்க நேரம் பிடிக்காது இனி வானம் வெளி வாங்குது பார் பார் பார் விடியுது.
4. நித்திரை விட்டெழுந்து நீ ரத்தத்தால் உள்ளம் கழுவி சத்திய ஆடை தரித்து கர்த்தரை சந்தி வா.