இயேசு கிறிஸ்துவின் நாமமிதே
yesu kiristhuvin naamamidhae
இயேசு கிறிஸ்துவின் நாமமிதே இனிமையாமே இன்பமதுவே ஏழைக்கும் ஆறுதலே
1. நாமம் அதிசயமே தேவதாசரின் புகலிடமே நானிலந்தனிலே யாவரும் வணங்கிடவே நாதன் இயேசுவின் நாமமதையே நன்றியுடன் புகழ்வோம் – இயேசு
2. அளிப்பேன் யாவுமே என் நாமத்தில் என்றனரே அழித்த வலியவனை வல்லமையுண்டதிலே களிப்போம் வல்ல நாமத்திலே கனிந்தே பாடிடுவோம் – இயேசு
3. நோய்கள் நீக்கிடவும் நவ பாஷைகள் பேசிடவும் சர்ப்பங்களை எடுக்க சக்தி ஈந்துதவும் உத்தமர்கள் போற்றிப் புகழும் கர்த்தரின் நாமமதே – இயேசு
4. சாவுக்கேதுவான கொடும் நஞ்சைப் பருகிடினும் சேதப்படுத்தாதே காக்க வல்லதுவே நாதன் ஈந்த தைலமெனவே நமக்காய் ஊற்றுண்டதே – இயேசு
5. பாவ இருள்தனை போக்கும் புண்ணிய நாமமதாய் பாரில் இறங்கினாரே தேவனின் அன்பதுவே இயேசு கிறிஸ்துவே நேசரிவரே ஆசைக்குகந்தவரே – இயேசு