இயேசு கிறிஸ்துவின் அன்பு
yesu kiristhuvin anbu
இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது
உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார் உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார் உனக்காகவே அடிகள் பட்டார் உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்
கள்ளர் மத்தியில் ஒரு கள்வனை போல குற்ற மற்ற கிறிஸ்தேசு தொங்கினாரே பாவி உனக்காய் அவர் கரங்கள் பார சிலுவை சுமக்கிறதே
பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே தயங்கிடாதே தாவி ஓடி வா தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ளவா
உன் பாவரோகங்கள் சுமந்தவராய் சிலுவை மீதே சாபமானாரே கலங்கிடாதே கர்த்தரண்டைவா உன்னத ஜீவன் உனக்களிப்பார் - 2
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Am Em
C Em
E Am Em
B Em
Em B G
Am Ebdim Em
C Em B Em
C B Em
Em B G
Am Ebdim Em
C Em B Em
C B Em