யேசு கிறிஸ்துவே பூதலத்திலே
yesu kiristhuvae poodhalathilae
1. யேசு கிறிஸ்துவே பூதலத்திலே கேட்டில் விழுந்தோர்க்கு ஞான ஒளி ஜீவன் மீட்புமான ரட்சகர் நீரே யேசு கிறிஸ்துவே.
2. என்னை மீட்க நீர் ஜீவனை விட்டீர் பாவம் யாவையும் தொலைக்க ஆக்கினை எல்லாம் விலக்க எனக்காக நீர் ஜீவனை விட்டீர்.
3. ஆஸ்தி ஜீவனும் மற்ற யாவையும் தேவரீருக்காய் வெறுக்க ஆசை நெஞ்சிலே இருக்க என்னை முழுவதும் ஆட்கொண்டருளும்.
4. உம் ஆளுகையில் நித்ய ராஜ்யத்தில் எனக்காய் ஆயத்தம் பண்ணும் வாசஸ்தலம் நித்ய வாழ்வும் எனக் களித்தே தேற்றும் யேசுவே.