இயேசு இரட்சகர்
yesu iratsagar
இயேசு இரட்சகர் ஏழையாக இத்தரை மீதில் வந்துதித்தார்
1. வான் வெளி தனில் வின் தூதர்கள் கூடியே இன்னிசை முழக்க முன்னணையில் இன்னல்கள் நீக்கும் மாந்தர்க்கு ஒளியாய் அன்பர் அவதரித்தார் - பூவில் - இயேசு
2. பார் தலம் வரவே பரன் துறந்தனரே பாவ நிவாரண பலி யாவரே பாசம் வைத்ததினால் எளியோர் தாழ்மையை பரிவாய் கண்ணோக்கிடவோ - மிக - இயேசு
3. பெத்தலை பதியாம் தேவ குமாரன் மெல்கிசேதேக்கின் முறைமையில் நினைத்திடும் நித்திய ஆசாரியரிவர் தொல்லுலகில் உதித்தார் - இந்த - இயேசு
4. தேவனின் மகிமை சாயலை யிழந்தே ஜீவனற்றவராய் மாள்கையிலே நாடியே மேவி ஜீவனையளித்த நல்ல சமாரியனே - ஏற்ற - இயேசு
5. இம்மானுவேலன் உன்னத மைந்தன் இன்றுமென்றும் நம் மோடிருப்பார் பணிவுடன் தேவ சித்தம் செய்ய படைத்திடுவோம் அவர்க்கே முற்றும் - இயேசு