இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
yesu ennum naamam en naavukku sugirdham
இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் நானிலம் தனில் என் அரனே – ஆ தீருமென் குறைவும் தீதுகள் குறையும் தீருமென் திகிலும் உரைக்கவும் பெயரும்
சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும் சஞ்சலம் யாவுமே அகற்றும் ஆ ஆ பந்தனை ஜெயித்து வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும்
வெவ்வேறு பாஷையை பேசிடச் செய்திடும் வெவ்வேறு நாவினால் துதிக்க ஆ ஆ வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே வேந்தனை அண்டினோர்காறுதல் இதுவே
பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும் நோய் பிணி யாவுமே தொலையும் ஆ ஆ அதிசயம் நடக்கும் அற்புதம் பெருகும் அதிசயர் பெயரும் என்றென்றும் ஜெயிக்கும்
ஆ என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில் ஆனந்தமே அதன் நினைவில் ஆ ஆ தேனிலும் இனிமை பேதைக்கு மகிமை தேனிலும் இனிமை ஏழைக்கும் உரிமை
வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் தொனித்திட இயேசுவின் நாமம் ஆ ஆ மடங்குமே முழங்கால் அடங்குமே துடுக்கும் மடங்கும் எப்பெயரும் நடுங்குமே அவர்க்கு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E E A E E C#m B E E C#m B C#m B E