இயேசு எங்கள் மீட்பராக இவ்வுலகில்
yesu engal meetparaaga ivvulagil
இயேசு எங்கள் மீட்பராக இவ்வுலகில் தோன்றினாரே - 2 பெத்தலையில் பிள்ளையாக நாதர் ஏசு தோன்றினாரே - 2
பாவிகளின் பாவத்தை போக்க அவனியில் வந்துதித்தார் - 2 ஆபத்துகள் நீங்கிடவே அவரையே நாம் துதிப்போம் - 2
மூவுலகும் தாங்கும் தேவன் முன்னணையில் பிறந்தனரே - 2 அகிலலோக பாவம் நீக்கி முற்றிலுமாய் மீட்டிடவே - 2
மனுக்குலத்தின் பாவம் தீர்க்க அன்பால் இயேசு வந்துதித்தார் - 2 பூவுலகின் மீட்பராக புனிதர் இயேசு தோன்றினாரே - 2
சாத்தானின் தலை நசுக்க கர்த்தர் ஏசு அவதரித்தார் - 2 நித்தம் நம்மைக் காத்திடவே நித்திய தேவன் தோன்றினாரே - 2
ஆறுதல் அளித்திடவே ஆதரவளித்திடவே - 2 பாதகரை இரட்சிக்கவே பாரினிலே வந்துதித்தார் - 2
ஏசுவை நாம் நேசிக்கவே அவர் நம்மைச் சந்திப்பாரே - 2 அவர் சித்தம் செய்திடுவோம் அவனியில் நாம் நிதமும் - 2
பூவுலகில் வந்த கர்த்தர் புனிதராய்த் தோன்றினாரே - 2 மானிடர்க்காய் அவதரித்த மாபரனை ஸ்தோத்திரிப்போம் - 2