இயேசு எந்தன் சொந்தமல்லவோ
yesu endhan sondhamallavo
இயேசு எந்தன் சொந்தமல்லவோ அவரின் முகம் காணுவது இன்பமல்லவோ உந்தன் நாமமே எங்கள் ஆறுதல் கைவிடாத என் அடைக்கலமே
1.நீரின்றி வாழ்வில்லையே - நின் துணையின்றி வழியில்லையே என் தெய்வமே என் இயேசுவே உந்தன் கரம் பற்றி வாழ்ந்திடுவேன் -(2)
2. புது எண்ணெய் ஊற்றிடுமே - என்னில் புது பெலன் அளித்திடுமே என் ராஜனே என் தேவனே புதுபாடல் நான் பாடிடுவேன் (2)
3.வாழ்வது உமக்காக - என்னை வனைந்திடும் உம்மைப் போல என் நேசரே உம் மார்பிலே நிதம் சாய்ந்திளைப்பாறிடுவேன் (2)
4. கூப்பிடும் வேளைதனில் - என்னை நோக்கிடும் அன்பர் நீரே என் கர்த்தரே என்இரட்சகா உம் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - (2)