யேசு என் வழி நடத்த வேறு ஏதும் வேண்டுமோ
yesu en vazhi nadatha veru edhum vendumo
1. யேசு என் வழி நடத்த வேறு ஏதும் வேண்டுமோ? சென்ற நாள் க்ருபையால் ஆண்ட அவரில் சந்தேகமோ? தேவ சமாதானம் ஆற்தல் இங்கவரில் தங்கவே என்ன நேரிட்டாலும் ஸ்தோத்ரம் யேசின் செயல் நன்மையே.
2. யேசு என் வழி நடத்தி சுழலிலும் தேற்றுறார் சோதனையில் க்ருபை தந்து ஜீவப்பம் போஷிக்கிறார். என் அடி தள்ளாடினாலும் என் ஆத்மா தவிக்கினும் பொங்குதே சந்தோஷ ஊற்று இதோ! கன்மலை நின்றும்.
3. யேசு என் வழி நடத்த என்ன பூர்ண பேரன்பு! வாக்கு சம்பூரண ஆற்தல் என் பிதா வீட்டில் உண்டு என் ஆத்மா சாவாமை போர்த்து இலங்கும் ராஜ்யம் சேர இதோ எந்தன் நித்ய கீதம் "வழி எல்லாம் யேசுவே".