இயேசு என் வாழ்க்கையின் வழிகாட்டி
yesu en vaazhkkaiyin vazhigaatti
இயேசு என் வாழ்க்கையின் வழிகாட்டி என் வாழ்க்கையின் இடத்தின் படகோட்டி நோக்கிடும் திசையெல்லாம் தெரிகின்றார் வாழ்க்கையின் துணையாய் வருகின்றார்
இசைபாடும் கீதம் என் இயேசு - தென்றல் அசைந்தாடும் தொனி என்தன் இயேசு அவர் அன்புபாதையில் ஒளிகண்டேன் என் இயேசு வழி சென்றாலே அருள் கூடும்
மனிதனாய் பிறப்பது அரிது - மாந்தர் தெய்வத்தோடிணைவதோ பெரிது எனக்காக நான் வாழ வழி சொன்னார் என் இன்னல்கள் யாவையும் அவர் சுமந்தார்