இயேசு என் நேசர் சாரோ இயேசு என்
yesu en nesar saaro yesu en
இயேசு என் நேசர் சாரோ இயேசு என் நேசர் சாரோனின் ரோஜா ஊற்றுண்ட தைலம் அவர் நாமம்
1. காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல் களைத்த நேரத்தில் கர்த்தரின் சமூகம் அவரின் நிழலில் தங்கியே மகிழ்வேன் மதுரக்கனி தருவார் – 2 – இயேசு
2. மரணம் போலவர் நேசம் வலியதே அக்கினித் தழலாம் அவரின் நேசமே அணைப்பதில்லையே திரண்ட தண்ணீரும் ஆஸ்தியும் இணையில்லையே – 2 – இயேசு
3. வருத்தம் பாடுகள் வேதனை சகித்தே வாசனை வீசிடும் தூபஸ்தம்பமிவர் வேகமே வருவார் மேகங்களுடனே நேசரை சேர்த்திடுவோம் – 2 – இயேசு
4. மேனியில் வெண்மையும் சிவப்புமானவர் ஆயிரமாயிரம் பேரில் சிறந்தவர் பூரண ரூபமும் இன்பமுமானவர் முற்றிலும் அழகுள்ளவர் – 2 – இயேசு