இயேசு என் மீட்பர் சென்ற
yesu en meetpar sendra
1. இயேசு என் மீட்பர் சென்ற இவ்வழியே இடுக்கம் நெருக்கமல்லோ ஆ ஆ ஆ இன்னலும் கன்னலும் இம்மண்ணில் உண்டல்லோ இதுவே சீயோன் பாதை
தேவனின் கிருபையே சீயோனின் சிறப்பு சேருவேன் என்றதிலே முகமுகமாய் பிதாவின் முகம் கண்டுமே யுகாயுகங்கள் சேவிப்பேன்
2. நிந்தையும் தந்தையும் விந்தையின் கோலம் எந்தையின் வழி எதுவோ ஆ ஆ ஆ அந்தம் அழிந்தாலும் சொந்தம் ஒழிந்தாலும் சந்ததம் சிந்தையே சீயோனே - தேவ
3. ஏகனாய் ஏங்கியே ஏகி அகந்தனில் சோகத்தால் அகம் முடியும் ஆ ஆ ஆ கையுறையாக வைத்தேன் என் ஜீவனை வைகறை தோன்றிடும் வரையும் - தேவ
4. இயேசுவே வேகமாய் என்றிலங்கிடுவேன் சீயோனின் முடிதனில் ஆ ஆ ஆ தூயவர் அடிகள் தொடர்ந்து தாதையின் நேயத்தின் நிறைவில் வருவேன் - தேவ
5. மெல்கிசேதேக்கின் நல் முறைமையில் வந்ததாம் மூலைக்கல் இயேசுவைப்போல் ஆ ஆ ஆ அப்போஸ்தலர் தமிழ் காலடி சுவடு அஸ்திபாரம் திருச்சபைக்கு - தேவ