யேசு என் மீட்பர் சண்டாளருக்காய்ப்
yesu en meetpar sandaalarukkaayp
1. யேசு என் மீட்பர் சண்டாளருக்காய்ப் பூமியில் பிறந்தார் பாலகனாய் நீச மா பாவியைக் கருணையாய்த் தேடி வந்தார்- வந்தார்.(3) நீச மா பாவியைக் கருணையாய்த் தேடி வந்தார்.- வந்தார்.
2. பாவ மா கடனைத் தீர்த்துப் போட்டார் தீவினை நீக்கவும் பாடுப்பட்டார் யேசுவைப் போல் வல்ல ரட்சகர் யார்? உயிரைத் தந்தார்- தந்தார்(3) யேசுவைப் போல் வல்ல ரட்சகர் யார்? ஊயிரைத் தந்தார்- தந்தார்.
3. சிறியோன் மாய்கையின் பாவத்தினால் புத்தியில்லாமலும் அலையுங்கால் நீசனை நினைத்து நேசித்ததால் ரட்சை செய்தார் செய்தார்(3) நீசனை நினைத்து நேசித்ததால் ரட்சை செய்தார் செய்தார்.
4. யேசு என் மீட்பர் வந்தருள்வார் வானத்தில் நின்றவர் இறங்குவார் மாட்சிமையோடென்னைச் சேர்த்துக்கொள்வார் வாழச் செய்வார்- செய்வார்(3) மாட்சிமையோடென்னைச் சேர்த்துக்கொள்வார் வாழச் செய்வார்- செய்வார்.