இயேசு என் இதய
yesu en idhaya
இயேசு என் இதய தெய்வம் ஏற்றிடுவேன் துதி கீதம் - இயேசு
1. அதிசயமாம் அவர் நாமம் அளிக்கும் மெய் சமாதானம் அகமதிலே அருள்தனையே அளிக்கும் அருள் நிறை தெய்வம்
2. வானத்தின் கீழ் பூமி மேலே வேறில்லை மீட்டிடும் நாமம் இகமதிலே இறை மகனாம் இரட்சகர் இயேசு என் தெய்வம்
3. பாவங்கள் போக்கிடும் நாமம் சாபங்கள் தீர்த்திடும் நாமம் பேய்தனையே நோய்களையே போக்கும் அடைக்கல நாமம்
4. துதித்திடும் நாவுகள் யாவும் துங்கவன் இயேசுவின் நாமம் அகிலமுமே அவர் பெயரால் முடங்கும் முழங்கால் யாவும்
5. என் உள்ளமே அவர் நாமம் என்றும் துதித்திடு வாயே விண்ணதிலே சேர்த்திடுமே மன்னவன் இயேசுவின் நாமம்