இயேசு என் அஸ்திபாரம்
yesu en asthibaaram
1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே - நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்!
2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும், - அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்!
3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே
4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும் - சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க?
5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும் - முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார்
6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும் - மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்
7.பாவத்தால் என்னில் வந்த சாபக் கறைகள் மாற்றி - சோபித நீதியுடை ஆபரணமாய் ஈவார்
8.ஆசையென்மணவாட்டி ஆக்குவேன் உன்னை என்னும் - நேச உறுதியுரை இயேசு எனக்களித்தார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Em Am F G C G F G C C Em Am C C G F G C C Em Am Am C G F G C C Em Am C C G F G C C Em Am Am C G F G C C Em Am C C G F G C