யேசு அன்பை என்றும் பாடுவேன்
yesu anbai endrum paaduven
1. யேசு அன்பை என்றும் பாடுவேன் அவ்வன்பென்றும் குறையாததே சிந்தின தேவாட்டுக் குட்டியின் ரத்தத்தை வாழ்த்திப் போற்றிடுவேன்.
நம்புறேன் ரட்சித்தார் ரத்தத்தால் வெண்மை நான் ஆகுவேன்.
2. யேசுவின் ரத்தத்தில் மூழ்கின எவர்க்கும் சுத்தம் சுகம் உண்டாம் பூர்ண விடுதலை சந்தோஷம் இப் புவியில் அவர் ரத்தத்தால்.
3. பரிசுத்தம் என்னும் ப்ரமாண ஜெயக் கொடியும் பறக்கட்டும் ராஜாதி ராஜாவின் கரத்தால் ஜீவ க்ரீடம் நாம் பெறுமட்டும்.