யெல்ஷதாவாய் கண்மணிபோல
yelshadhaavaay kanmanibola
யெல்ஷதாவாய் கண்மணிபோல எம்மைக் காத்தீரே வல்ல தேவன் நீர்தானல்லவோ - இடத்தில் அல் பகல் உம் துதி சாற்றுவோம்
1. நானே யுனக்கு வல்ல அரணும் நானிலத்தில் தாகந்தீர்க்கும் உரவென்றீரே கானான் கரை சேரும் வரை ஜெயமாய் வானாகாரமீந்து போஷிப்பார் - யெல்ஷ
2. நாடி எம்மையே பார்தலத்தில் தேடி வந்த நல்லதோர் சமாரியன் நீரே நாடி மரத்தில் சொரிந்தீரே உதிரம் மடிவோர் எம்மை வாழ்விக்கவே - யெல்ஷ
3. மாட்சி மிகவே காட்சியளித்தார் முட்செடியில் மோசேக்கு அநாதி தேவன் ஆட்சி செய்வோம் ஜீவித்தே யுகங்களாய் இரட்சகர் இயேசு உம்முடனே - யெல்ஷ
4. மாறிடாத உம்மா கிருபையால் தேறியே உம்மில் உந்தன் நிறைவடைந்த மாறிடுவோம் மகிமையின் சாயலாய் மறுமையின் புத்திரருமாய் - யெல்ஷ
5. தேவ சித்தம் செய்ய அழைத்தீர் தேகமதில் திருச்சிற்றம் செய்த சுதன் போல் ஏக ஆவியில் ஆடிப்பாடி மகிழ்வோம் ஆகமனம் அடுத்திடுதே - யெல்ஷ