யேகோவா நிசி யேகோவா நிசி - யேகோவா நிஷி யேகோவா நிஷி
yegovaa nisi yegovaa nisi - yegovaa nishi yegovaa nishi
யேகோவா நிஷி யேகோவா நிஷி யேகோவா நிஷி யேகோவா நிஷியைப் போற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக்கொடியே -2
வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே மாறு கொண்டு மன்னர்; முன்னே செல்கிறார்; சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ? மீறுமெதிரி சதிகளுக்கு மிரளவா? யூத சிங்கம் யுத்த சிங்கமே -2
கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்ய ஆவி நிற்கிறார்; கர்த்தர் வல்ல யுத்த வீரரே -2
நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே பட்டயமோ புயபலமோ தேவையா? பரமதேவ ஆவி நம்மில் இல்லையா? ஜீவ தேவ சேனையல்லவா? -2
முடிந்ததென்று முழங்கி நிற்கும் வீரனே முற்றுமவனை முறியடித்த தீரனே சிலுவையில் சிரம் நசித்த சீலனே சிலுவைக் கொடியை ஏற்றும் தேவபாலனே வெற்றி வாகை சூட்டிப் பணிகிறோம் -2
சத்துரு வெள்ளம்போல ஏறி வருகிறான் சத்ய ஆவி வேகம் கொடியை கோலியாத்தின் வேஷம் இங்கு செல்லுமா? கோஷமிடும் இளைஞர்முன் செல்லுமா? கர்த்தர் நாமம் வல்ல கோட்டையே-2
ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வோமே ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே ஆர்ப்பரித்து அலங்கமதை வீழ்த்தியே ஆவிகளின் சேனைகளை வெல்வோமே கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ-2
அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே அல்லேலூயா இயேசு ராஜா வருகவே அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே அல்லேலூயா தேவ படை வெல்கவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே -2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F Gm Dm Dm Dm C Dm Dm C Dm Dm C Dm Dm C Bb