யெகோவா நீர் அல்லோ
yegovaa neer allo
யெகோவா நீரல்லோ நல்லவர் இயேசுவே நீரல்லோ நல்லவர் (2) உம்மை ஸ்நேகிக்கின்றதும் உம்மை சேவிக்கின்றதும் என் ஜீவித பாக்கியமே (2)
1. என் பாரம் ஏறும்போதும் என் தேகம் தளறும் போதும் ஒளஷதமாய் அருகில் நின்று என்னைத் தூக்கி நிறுத்தினீர்
2. சோதனைகள் வந்தென்னை தனி மரமாய் நிறுத்தும்போதும் நல்ல துணையாய் அருகில் வந்து அரவணைத்து நடத்தினீர்
3. என் கால்கள் சறுக்குதென்று பல நேரம் கதறி அழுதேன் உந்தன் கிருபை கரங்கள் நீட்டி என்னை நிலையாய் நிறுத்தினீர்
4. மோசமான இவ்வுலகில் நாசமாய் நான் போய் விடாமல் பாசமாய் நீர் தேடி வந்தீர் நேசமாய் கரம் பிடித்தீர்
5. தாழ்விலில்லை ஸ்நேகிதர்கள் வாழ்வு வந்தோ ஆயிரங்கள் என் தாழ்வில் நினைத்த நீரோ அன்றும் இன்றும் ஸ்நேகிதர்