யேகோவா தேவனுக்கே மகிமை
yegovaa devanukke magimai
யேகோவா தேவனுக்கே மகிமை செலுத்தி விடுவேன் அவர் செய்த நன்மைகளை என்றும் மறவாமல் நான் உயிருள்ளவரை பாடுவேன் -2 யேகோவா யீரே நீர் யேகோவா நிசி நீர் யெகோவா ஷாம்மா நீர் யெகோவா சாலோம் நீர் -2
எனக்காக யாவையும் செய்து முடிப்பார் ஒரு போதும் வெட்கப்பட்டு போகமாட்டேன் -2 தடைகளை உடைத்து முன்னே செல்வார் -2 யேகோவா யீரே பார்த்துக்கொள்வார்
யுத்தங்களை எனக்காய் செய்திடுவார் வெற்றிமேல் வெற்றியைக் கண்டிடுவேன் -2 சத்ருவை ஜயித்து காலின் கீழ் மிதிப்பேன் -2 யேகோவா நிசியே வெற்றிக்கொடியே
நிச்சயம் உன்னை கண்டிடுவேன் நம்பிக்கை ஒருபோதும் வீணாகாதே -2 அழுகையின் பாதை களிப்பாய் மாறும் -2 யேகோவா ஷம்மா கூட இருப்பார்