யேகோவா தேவன் என்னோடு
yegovaa devan ennodu
யேகோவா தேவன் என்னோடு இருக்க எதற்கு பயப்பட வேண்டும் நான் எதற்கு அஞ்சிட வேண்டும்
எலியாவோடு இருந்த தேவன் என்னோடும் இருக்கின்றார் எலிசாவோடு இருந்த தேவன் எனக்குள்ளே இருக்கின்றார்
ஆபிரகாமோடு இருந்த தேவன் அன்றும் இன்றும் இருக்கின்றார் ஆகாரோடு இருந்த தேவன் அடிமையோடும் இருக்கின்றார்
யாக்கோப்போடு இருந்த தேவன் யாப்போக்கிலும் இருந்திட்டார் ஈசாக்கோடும் இருந்த தேவன் நீசனோடும் இருக்கின்றார்
மோசேயோடு இருந்த தேவன் யோசுவாவோடும் இருந்திட்டார் சீனாய் மலையில் இருந்த தேவன் சீஷன் என்னிலும் இருக்கின்றார்
செங்கடலில் இருந்த தேவன் செல்லும் இடமெல்லாம் இருக்கின்றார் செந்நீரை வடித்த தேவன் கண்ணீரை துடைக்கின்றார்
இதுவரை என்னை நடத்தின தேவன் இனியும் என்னை நடத்திடுவார் இருக்கின்றவராய் இருக்கின்ற தேவன் இறுதி வரையும் நடத்திடுவார்