யாவும் செய்து முடிப்பார்
yaavum seydhu mudippaar
யாவும் செய்து முடிப்பார் எனக்காக யுத்தம் செய்து ஜெயித்தார் என் இயேசு
உலகத் தோற்றமுன்னே எனக்காக தம்மையே தானமாக தந்தார் உலக சிருஷ்டிப்பில் எனக்காக யாவையும் செய்து முடித்தார்
கல்வாரி சிலுவையில் எனக்காக இரத்தத்தையே தியாகமாக ஈந்தார் பாடுகள் வேதனைகள் எனக்காக பொறுமையாய் சகித்தாரே
நித்திய ராஜ்யத்தில் எனக்காக யாவையும் செய்து முடித்தார் வானவரோடென்றும் வாழ்ந்திடவே கிருபையின் வாசலைத் திறந்தார்