யாவும் எனக்காய் முடித்த
yaavum enakkaay muditha
1. யாவும் எனக்காய் முடித்த இயேசுவே உம்மைப் போல் பாரில் நேசிக்க வேறாரும் காண்கிலேன் யார் மாறிடா உந்தன் அன்பை இசைக்கவும் எளிதோ மறவேன் என்றும் உன் நாமத்தை எண்ணி துதித்திடுவேன்
யேகோவா நிசி யாம் இயேசுவே ஜெயத்தோடென்னை நடத்திடுவார் அநாதி தேவன் அடைக்கலம் நீரே அநாதி நோக்கம் என்னில் முற்றுமாய் நிறைவேற்றுமே
2. காரிருள் போன்ற சோதனை வேதனை சூழ்ந்த நேரம் கர்த்தர் தீபமாய் வந்து என்னை ஆதரித்தவர் கண்ணீரின் தாழ்வதை உருவ நடந்திட்ட வேளை தண்ணீர் தடாகமாய் மாற்றிடவே ஜீவ ஊற்றுமானீரே - யேகோவா
3. தேசமும் பாஷை ஜாதிகள் யாவுமே கொந்தளித்து தேவ ஜனத்தையும் அழித்திட எழுப்பினாலும் சத்துருவின் வல்லமை முற்றுமாய் அழித்திட தேவரீர் சர்வ வல்லமையாய் எழும்பூர்! சந்ததம் உம்மைத் துதிப்பேன்
4. புவியில் தேவபக்தியும் உண்மையும் குறைந்திடுதே ஆதிக்கிரியையும் அன்பும் தணிந்திடுதே பயபக்தியுடன் இரட்சிப்பை நிறைவேற்ற என்னிலே ஆவியின் பலம் ஈந்திடும் இரட்டிப்பாய் ஈந்திடும் - யேகோவா
5. சுந்தர் மீட்பின் நாள் இதோ வேகமாய் நெருங்கிடுதே “உயர்த்திடுவேன் உம் அரசரை” என்றுரைத்தீரே நல்ல போர் புரிந்தான் ஓட்டம் முடித்திட ஜெயம் வல்ல வரே என்னை ஒப்புவித்தேன் வல்லமை தந்திடுமே - யேகோவா