யாவேவின் தேவ நகரம்
yaavevin deva nagaram
யாவேவின் தேவ நகரம் யாவேயின் தேவ நகரம் விசுவாசத்தால் கண்டோர் பணிந்து போற்றும்
யாவேயின் தேவநகரம் அலங்கரித்து ஆயத்தமாக்கப்பட்ட அதற்கு மகிமை கனம் செலுத்துங்கள் (2)
புதிய எருசலேமாம் பரலோகத்தை விட்டு இறங்கி வந்த புதிய எருசலேமாம் புதிய வானமாம் புதிய பூமியாம் முந்தினவை யாவும் ஒழிந்துபோயின (2)
தேவனின் வாசஸ்தலம் இதோ மனுஷரிடம் இருக்கிறது தேவனின் வாசஸ்தலம் அவர்களில் அவர் வாசமாயிருப்பார்(2) அவர்களும் அவர் ஜனமாயிருப்பர் //2
தேவன் தாமே இருப்பார் கூட இருந்து அவர்களின் தேவனாக தேவன் தாமே இருப்பார் அவர்களுடைய கண்ணீர்கள் யாவையும் தேவன் துடைப்பாரினி மரணமில்லை. //2
பரிசுத்த நகரமது அதன் வீதி சுத்த பொன்னாலானது பரிசுத்த நகரமது மதில் அஸ்திபாரம் ரத்தினங்களாமே ஆட்டுக்குட்டியானவர் அதன் ஆலயம் //2
நகரத்திற்கு வெளிச்சம் தேவ மகிமை பிரகாசமேதான் நகரத்திற்கு வெளிச்சம் சூரியன் சந்திரன் அதற்கு வெளிச்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஆட்டுக்குட்டியானவர் அதன் ஒளியாய் என்றும் இருக்கிறாரே ஆட்டுக்குட்டியானவர் ரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே துதித்து நடப்பார்கள்
பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமை கனத்தை நகரத்துக்குள் பூமியின் ராஜாக்கள் கொண்டு வருவார்கள் தீட்டுள்ள ஒன்றும் அதில் ப்ரவேசிப்பதில்லை அலேலூயா //2