யாவேக்கு பயந்து அவர் வழியில்
yaavekku payandhu avar vazhiyil
யாவேக்கு பயந்து அவர் வழியில் பணிந்து நடப்போன் பாக்யவான் முயன்று கைகளின் பலனை உண்பான் பாக்யமும் நன்மையும் உண்டாயிருக்குமே
உன் மனைவி உன் வீட்டோரங்களி;ல் கனிதரும் திராட்சைக் கொடியாய் இருப்பாள் உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் /2 ஒலிவக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்
இதோ கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷன் இவ்விதமாகவேதான் ஆசீர்வதிக்கப்படுவான் என்றென்றுமே /2 சீயோனிலிருந்தே ஆசீர்வதிப்பாரே
நீ ஜீவனுள்ள நாளெல்லாமே எருசலேமின் வாழ்வை காண்பாய் உனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் /2 இஸ்ரேலுக்கு சமாதானத்தையும் காண்பாய்