யாவே நீர் எந்தன் நல்
yaavae neer endhan nal
1. “யாவே”நீர் எந்தன் நல் மேய்ப்பரல்லோ என்றும் நீர் எனக்கு ஜீவ ஊற்றல்லவோ "யாவும் உனக்காக செய்வேன்" என்றான் பாரில் என் தஞ்சம் என்று நீரல்லவோ
யாதொன்றும் செய்திட யார் இயலின் நீரன்றி பாரினில் இயேசுவே உந்தன் பெலத்தினால் யாவும் செய்திடுவேன் உமதாவியினால் ஜெயங்கொள்வேன்
2. சிலுவை மீதினில் சொரிந்தே உத்திரம் விலையாய் நல்கினார் என் பாவம் நீக்கிட உந்தன் தேகமதில் காயங்கள் ஏற்றீரே எந்தன் சாப் ரோகமும் போக்கிடவே - யாதொ
3. அன்பினில் தூயனாய் குற்றமில்லாதவன் அம்புவி தோன்றுமுன் கண்டீரே உம்மிலே அன்பரே உம்முடன் என்றும் யான் நின்றிட ஆவியின் ஆலமதை ஈந்தனீரே - யாதொ
4. அஸ்திபாரமாகும் அப்போஸ்தலரையும் அளித்தீரெமக்காய் ஈவாய் அன்பினாலே தூய ஆலயமாய் சேர்த்து பணித்திட தூயராம் மூலைக்கல்லாம் உம்முடனே - யாதொ
5. சீயோன் சாலேம் இணைந்த சபையாய் சீலத்தால் நிறைந்த ஏங்கி தவிக்குது சீர்மிகு சித்திரை சேர்த்திட உம்முடன் சீயோனின் ராஜானே வேகம் வாருமே - யாதொ