யாருண்டு இயேசுவே
yaarundu yesuvae
1. யாருண்டு இயேசுவே உம்மையல்லால் பாரினில் நேசிக்கவே தீராத தாகம் தீர்த்திடும் நல் நீரோடையாய் அகம் வந்திடுமே
ஒப்புவித்தேன் இயேசுவே தப்பாதும் கைத்தலத்தால் முற்றும் என் ஜீவியமே மாறவே நின் சாயல்
2. அம்புவி தோன்றும் கண்டனீரே அம்பரன் உம் மூலமாய் அன்பினில் தூயவனாய் என்னையும் உம்முடன் நிறுத்த நினைந்தீரே - ஒப்பு
3. உம்மோடறையுண்டு நான் பிழைக்க முற்றும் மரித்தவன் மாறாத தேவ குமாரன் உம் மா தூய விசுவாச மீந்தனீரே - ஒப்பு
4. சீராய் போராடியே சூடிடவே நீதியின் கிரீடந்தனை ஊற்றியே ஜீவன் அன்பினாலே பெற்றிட ஜீவ கிரீடமதே - ஒப்பு
5. தேசியர் நம்பிக்கையாய் உள்ளத்தில் வாசஞ் செய்ய வந்தீரே ஆவி ஆத்மா வுடன் தேகமதை காப்பீர் கறை திரை இல்லாமலே - ஒப்பு