யாருக்குத் தெரியும் உந்தனின் அழைப்பு
yaarukkuth theriyum undhanin azhaippu
யாருக்குத் தெரியும் உந்தனின் அழைப்பு அன்பரின் பாதம் வந்திடுவாய் அழைத்தவர் உன்னை அருமையாய் நடத்தி அனுதினம் ஊழியம் அளித்திடுவார்
யோனாவைப் போல போனியோ நீயும் நினிவேயின் பாரம் உனக்கில்லையோ யாருக்குத் தெரியும் மன்னிப்பார் தேவன் என்று நினிவேயின் மக்களும் மனம் மாறினார்
எஸ்தரை போல உயர்த்தினாரோ உன்னை இஸ்ரவேல் ஜனத்தை மீட்டிடவே யாருக்குத் தெரியும் உந்தனின் மேன்மை உன்னத ஊழியம் செய்திடவே
திகைத்திடும் போது தயங்கிடாதே நீ தானியேல் ஜெபம் கேட்ட தேவன் உண்டே திருகரம் அணைத்து புகலிடம் அளிப்பார் திறப்பின் வாசலில் நின்றிடுவாயோ