யாருக்கு வேதனை யாருக்கு
yaarukku vedhanai yaarukku
யாருக்கு வேதனை யாருக்கு துக்கம் யாருக்கு சண்டைகள் அம்மா யாருக்கு சண்டைகள் யாருக்குப் புலம்பல் யாருக்கு காயம் யாருக்கு சிவந்த கண்கள் ஐயா யாருக்கு சிவந்த கண்கள் (மதுபானம் இருக்கும் இடத்தில் தங்கி வாழ்பவருக்கே கலப்புள்ள சாராயத்தை நாடும் மாந்தருக்கே)-2
மதுபானம் பாத்திரத்தில் பளபளப்பைத் தோன்றும் பாராதே பாராதே மெல்ல மெல்ல இறங்கிடும் -2 விரியனப்போல் தீண்டும் பாம்பைப் போல கடிக்கும் -2
வீதி செல்லும் சனியனை மது விலை கொடுத்து வாங்கிடும் மங்கையரில் மயங்கி அது வரம்புகள் பல செய்திடும் -2 அமளி செய்ய அழைக்கும் ஆயுள் நாளை குறைக்கும் -2
விஸ்கி ரம்மும் பிராந்தி கள்ளும் தாகமதை தீர்க்குமோ ஜீவத்தண்ணீர் இயேசு தான் உன் தாகம் மதை தீர்ப்பாரே -2 எழுந்து வா எழுந்து வா இயேசுவை நோக்கி ஓடி வா -2