யாரிவர்கள் பாடுவோரே
yaarivargal paaduvorae
1. யாரிவர்கள் பாடுவோரே யாருமறியாப் புதுப்பாட்டினை ஆசை இயேசுவின் பின் சென்றோரிவரே அனுதினம் பாடு சகித்தோர்
அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகிறார் அன்பினால் ஜீவனை வைத்ததாலே அன்பர் திரு முகம் காண்பார்
2. சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல சித்தம் தானே வெறுத்து சாட்டியுள்ளார் சீரிய சேவை செய்ததினாலே சீயோனிலென்றும் நின்றிடுவார் - அல்லே
3. தாதையின் நாமம் நெற்றியிலேற்று தீதில்லா வார்த்தை நாவில் உள்ளோர் தேவ சிங்காசனம் முன் நிற்கும் இவர்கள் தேசுயர் தேவ ஊழியரே - அல்லே
4. மாந்தரினின்றும் மாநிலம் நின்றும் மாண்புறு முதற்பலன் மீட்படைந்தோர் காசினி மீதிலே கறை திரை யில்லாத கற்புள்ள கன்னியரிவரே - அல்லே
5. வனப்பு வாய்ந்த வட புறத்தில் வல்லமையால் உயர் பர்வதம் வான் புவி மகிழ்வுடன் நோக்கும் சீயோனே மகா ராஜன் திருநகரம் - அல்லே