யாரிவர் யாரிவர் அருமை நாதர்
yaarivar yaarivar arumai naadhar
யாரிவர் யாரிவர் அருமை நாதர் போகிறார் அன்பின் சாயல் அந்தக்கேடாய் ஆனகாரணம் நீயல்லோ
நன்மை தீமை அறியும் கனியை புசித்தமனிதர் அழிவதில்லை ஜீவ கனியை உனக்கு தரவே ஜீவ பலியாய் போகின்றாரே
முள்முடி சூடி மனிதரே இகழ் மன்னவன் இயேசு சிலுவையுடன் உந்தனின் இருளை ஒளியாக மாற்ற உள்ளம் உடைந்து செல்கின்றாரே
கண்ணின் கண்ணீரை துடைக்கும் தேவன் இரத்த வேர்வை சொரிந்தனரே உந்தன் பாவசாப வியாதிகள் சிலுவை மீதே சுமந்தனரே