யார் அந்த மகிமையின்
yaar andha magimaiyin
யார் அந்த மகிமையின் ராஜா -(4) மரணத்தை ஜெயித்தவர் மறுபடி உயிர்தவர் மீண்டும் வருவேன் என்றவர் -(2) அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா -(2)
இஸ்ரவேலரின் பரிசுத்தரும் உலக இரட்சகர் ஆனவராம் -(2) அக்கினியின் நடுவில் உலாவின தேவன் அற்புதம் செய்வதில் வல்லவராம் -(2) அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா -(2)
பலவழியாய் உனக்கெதிராய் கெர்ச்சித்து சாத்தான் வந்தாலும் -(2) சேனையின் கர்த்தர் யுத்தம் செய்து ஜெயமாய் என்றும் நடத்திடுவார் -(2) அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா -(2)
திக்கற்ற பிள்ளைகள் விதவையும் சிறுமையில் கூப்பிடும் எளியோரையும் -(2) பூமியின் புல்லை போல் செழித்து ஒங்க செய்து மேன்மை பெருக செய்திடுவார் -(2) அவரே மகிமையின் ராஜா அவரே சாரோனின் ரோஜா -(2)