யாமும் தங்குழலும் உன் ஒசை மறைக்குமோ
yaamum thanguzhalum un osai maraikkumo
யாமும் தங்குழலும் உன் ஒசை மறைக்குமோ பாழுலகில் பாலனாய் வந்த நாதா தாழ்விலே என்னைத் தேடிவந்த உள் அன்பைச் சொல்ல தாலாட்டுப்பாடச் சொல்லித்தா ( 2 )
கற்றறிந்து பாட அறியாமல் - தேவா உந்தன் சொற்படி நான் பாடிட வந்தேன் பரிசுத்தாவியால் நிறைத்தே பாதாளப்பேய் நடுங்க பாடல்கள் சொல்லித்தாருமே ( 2 )
தூதர்கானம் பாடச் சொல்லித்தா திருமறையின் துதுகளைப் பாடச் சொல்லித்தா - மாது மரியாளின் மைந்தனாக மாட்டுத் தொழுவம் வந்த மாட்சிமை பாடச்சொல்லித்தா மகிழ்ச்சி கானங்கள் பாடச்சொல்லித்தா