யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்
yaakkobae un koodaarangalellaam
யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் எத்தனை அழகானவை அவை - 2 இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்கள் எவ்வளவு அழகானவை - அவை - 2
காரிருள் எகிப்திலே சூழ்ந்த போதும் இஸ்ரவேலில் வெளிச்சமுண்டு தேவன் காட்டிய பாதையிலே யாக்கோபுக்கு மகிமை உண்டு பரவிப்போகும் ஆற்றைப்போலும் கர்த்தர் நாட்டின் கேதுரு மரத்தைப் போலும் யாக்கோபின் கூடாரம் அழகானது
சத்துரு யாக்கோபை நெருக்கும் போதும் பெலனான கர்த்தர் உண்டு தேவன் இஸ்ரவேலில் இருப்பதினால் மந்திரங்கள் ஏதும் இல்லை நதியோரத்து தோட்டம் போலும் கர்த்தர் நாட்டின சந்தன மரத்தை போலும் இஸ்ரவேலின் வாசஸ்தலம் அழகானது