யாக்கோபே என் யாக்கோபே
yaakkobae en yaakkobae
யாக்கோபே என் யாக்கோபே யாக்கோபென்னும் சிறுபூச்சியே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் இஸ்ரவேலில் சிறுகூட்டமே பயப்படாதே நான் துணை நிற்கிறேன் என் யாக்கோபே என் யாக்கோபே பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன் நீ பரவிப் போகின்ற ஆறாய் மாறிடுவாய் உன்னை வாசனை வீசும் சந்தனமரமாய் நாட்டுவேன்
உனதுருவம் இனி வெட்கம் ஆவதில்லை உனதுருவம் இனி செத்துப்போவதில்லை நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
உனது வேரை பரவச் செய்திடுவேன் நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு