விழுந்த மனுஷன மீண்டும்
vizhundha manushana meendum
விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த பாவியானவன பரலோகம் சேர்க்க-2 இருளாய் இருந்த என்ன வெளிச்சமாய் மாற்ற பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2
பல்லவி
வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே இயேசு ராஜன் வழியை காட்டிடவே பிறந்தாரே இயேசு ராஜன்-2
1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2 சாத்தானின் தலையை நசுக்கிடவே சாப கட்டுகளை அறுத்திடவே-2
பல்லவி
வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே இயேசு ராஜன் வழியை காட்டிடவே பிறந்தாரே இயேசு ராஜன்-2
2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே பாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2 தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே தம்மோடு என்னை சேர்த்திடவே-2
பல்லவி
வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே இயேசு ராஜன் வழியை காட்டிடவே பிறந்தாரே இயேசு ராஜன்-2