விழித்திடும் விழித்திடுவேன்
vizhithidum vizhithiduven
விழித்திடும் விழித்திடுவேன் - உம் நேசருக்காய் விழித்திடும் விழித்திடுவேன்
போன படி மீண்டும் வரேன் என்று சொல்லி போனார் வான சேனையோடு விண்ணில் வரும் காலமாயிற்று காத்திரு ஜெபத்துடன் விழித்திடு ஓ! பாவியே எந்த வேளை வருவாரோ தெரிவதில்லை - விழி
கள்ளனை போல் வரும் போது துக்கிப்பார் துன்மார்க்கர் கண்ணீரோடு தேடினாலும் கிடைக்காத இன்பம் கன்மலையே மூடு என்னை என்றழுதிட்டாலுமே இவ்வுலகில் மீட்பில்லை வந்து சேரும் பாவியே - விழி
எக்காளத்தொனி கள் கேட்கும் நேரம் ஆ! பேரின்பமே அத்தொனி கேட்டு பக்தர்கள் ஆர்ப்பரிப்பேன் அன்று மே அன்பருரை மாறிடாதே ஆதி அன்பை விட்டு விடாதே அவருன்னை அனைத்துமே ஆர்ப்பரிப்பேன் ஓடி வா - விழி
அந்தொ, அந்தோ, மேகமதில் என் மணாளன் வாறாரே அவனிதனில் அவரை நீ தேடாமல் போறாய் அந்த நாளில் ஏங்கிடதே அன்பை நீ ஏற்றுக்கொள் ஐயோ நீ என்ன செய்வாய் வறண்ட ஓடிவா - விழி
நோவாவின் காலம் போலவே பாவத்திலே நில்லாதே நேயனுன்னை ஏற்றுக்கொள்வர் கிட்டு வா மகனே உன் நெஞ்சைத் தா நான் சுத்தி செய்வேன் என்று வாக்குரைத்தவரே தோஷமொடு சார் இந்நேரம் உன்னை மீட்டுக் கொள்வார் - விழி
உத்தமியே! நேசமே! உன் அங்கி பழுதாக்காதே பிரிவாய் இப்பொழுதே மற்றொன்றும் நீ நாடாதே கறையுன்னில் காணாது உன் அழகை நீ காத்திடு வேகமாக முகட்டிலென்பர் வருவார் தூதருமாய் - விழி