விழித்தெழும் பாயோ
vizhithezhum paayo
1. விழித்தெழும் பாயோ? திருச்சபையே! மணவாளன் வரவும் காலமாகுதே
2. வேதம் வெளியாக்கும் தரிசனங்கள் வேகம் நிறைவேறிப் பரம்பிடுதே!
3. விசுவாச துரோகம் சபைகளிலே விரைவுடன் கேடு நடப்பிக்குதே!
4. வேஷம் பக்தி சபையில் நிறைந்திடவே தேவ பக்தியின் பலன் குறைந்திடுதே!
5. ஆதி அன்பு இல்லை விசுவாசிகள் ஆதி ஜெபம் இன்றித் துங்குகின்றாரே
6. பதினோராம் மணியின் வேளையாயிற்றே. நடு ராத்திரி சத்தம் கேட்க போகுது!
7. சீயோனே! நீ எழுந்து சிந்தை செய்திடு, சீக்கிரம் வாரார் இயேசு ஆயத்தமா நீ?