விட்டுவிடாதீங்க விட்டுவிடாதீங்க
vittuvidaadheenga vittuvidaadheenga
விட்டுவிடாதீங்க (2) சபைக்கூடுதலை விட்டுவிடாதீங்க சொல்லுங்க புத்தி சொல்லுங்க (2) வருகை நாள் நெருங்க நெருங்க அதிகமாய் சொல்லுங்க (2) அன்புக்கு அடையாளம் இதுதானே இதுதானே அன்பரின் பார்வையில் நற்கிரியை இதுதானே (2)
1. வேலை கொடுத்து அதிக வேலை கொடுத்து வியாபாரத்தை அதிகப்படுத்தி (2) தடுத்திடுவனே சாத்தான் தடுத்திடுவனே (2) விட்டுவிடாதே சபையை விட்டுவிடாதே
2.கம்யூட்டர், டிவி பார்த்து ஆராதி அப்பம் பிட்குதல் ஐக்கியமும் வேண்டாமே (2) சொல்லிடுவானே சாத்தான் தடுத்திடுவனே (2) விட்டுவிடாதே சபையை விட்டுவிடாதே
3. கர்த்தர் அன்பாய் உன்னை சேர்த்த சபை தூரம்னு பக்கத்தில் போக சொல்லுவான் (2) நீ வளர்ந்திடாமல் இருக்க அது சாத்தான் சதி நீ குழந்தையாக இருக்க இது அவன் திட்டம் விட்டுவிடாதே சபையை விட்டுவிடாதே
4. பிள்ளைகளெல்லாம் சபைக்கு போக வேண்டாம் டியூசன் போனால் அதிக மார்க் வரும் வாலிபரெல்லாம் சபைக்கு போக வேண்டாம் வேலைக்கு போனால் அதிக காசு வரும் என்று சொல்லிடுவானே சாத்தான் தடுத்திடுவனே (2) விட்டுவிடாதே சபையை விட்டுவிடாதே
5. நாளைப் பத்தி பெரும் கவலை தந்து கர்த்தருக்கு கொடுக்க சாத்தான் விடமாட்டான் (2) நீ சுயநலமாய் வாழந்திடவே தூண்டிடுவான் நீ கர்த்தருக்கு சொந்தமென்று மறக்கடிப்பான் விட்டுவிடாதே சபையை விட்டுவிடாதே