விட்டுக்கொடுத்து வாழ்ந்து
vittukkoduthu vaazhndhu
விட்டுக்கொடுத்து வாழ்ந்து பாரு அதிலே ஒருபோதும் தப்பே இல்லை வீணான பிடிவாதத்தால் எவரும் வாழ்வில் வெற்றி கண்டதில்லை
விட்டுக் கொடு விட்டுக் கொடு விட்டுக் கொடு - நீ விட்டுக் கொடு விட்டுக் கொடு விட்டுக் கொடு விட்டுவிடு விட்டுவிடு விட்டுவிடு - வீணான பிடிவாதம் பிடிப்பதை நீ விட்டுவிடு
மாமியாரு மருமகளும் விட்டுக் கொடுத்தா மகிழ்ச்சியான வாழ்க்கையிலே சண்டையே இல்ல கணவன் மனைவி அஜ்ஜஸ் பண்ணிவிட்டு கொடுத்தா இன்பமான வாழ்க்கையிலே துன்பமே இல்லை ஃப்பிரிஸ்டேஜ் ஃப்ராபளம் தான் உன்னை கெடுக்குது விட்டுக் கொடுக்காதே இன்று இதோ உன்னை கெடுக்குது
ஆபிரகாம் லோத்துவிற்கு விட்டுக் கொடுத்தான் அதினால் செல்வச் சீமான் என்ற நல்ல பெயரை எடுத்தான் ஈசாக்கு கிணறு வெட்டி விட்டுக் கொடுத்தான் அங்கே விதை விதைத்து நூறு மடங்கு பலனை எடுத்தான் முற்பிதாக்கள் போல நீயும் வாழ நினைக்கணும் உனக்கு விட்டுக் கொடுக்கும் தாராள மனசு இருக்கணும் இயேசு அன்று சிலுவையிலே உனக்காய் ஜீவனையே விட்டுக் கொடுத்தார் ஜீவனை அவர் தந்ததினால் நீயும் ஜீவனுள்ள வாழ்வை பெற்றாய்