விசுவாசியே நினைத்துப்பார்
visuvaasiyae ninaithuppaar
விசுவாசியே நினைத்துப்பார் நிலைப்பவைகளை நாடு நித்திய ஜீவன் பெற ஓடி வருவாயே இன்றே பாடி மகிழ்வாயே அன்றே – 2
1. அறுப்பு மிகுதி ஆளோ இல்லை வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி – 2 நினைத்து புலம்பி அலைந்து தேடு – 2 செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே – 2 – விசுவாசியே
2. நீ போகாவிடில் யார் போவார் இப்போதில்லாவிடில் எப்போ – 2 கணக்கு கேட்பார் என்ன செய்வாய் – 2 கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு – 2
3. நீ பேசாவிடில் கற்கள் பேசும் நீ இல்லாவிடில் வேறே யாரோ – 2 மனம் திரும்பு உலகத்தை விட்டு – 2 செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே – 2
4. வருகையின் நாள் சமீபமே வல்லமை தேவன் வெளிப்படவே – 2 பூமி அழியும் பூதலம் எரியும் – 2 சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும் – 2